விஜய் ஆண்டனியின் டுவிட்டால் குழம்பி இருக்கும் ரசிகர்கள்


விஜய் ஆண்டனியின் டுவிட்டால் குழம்பி இருக்கும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2022 5:47 PM GMT (Updated: 2022-01-11T23:17:04+05:30)

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சமீபத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டால் அவருடைய ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பல ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

திரைதுறையினர் பலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு இவருக்கு  என்ன ஆச்சு என்று அவருடைய ரசிகர்கள் குழம்பி அக்கரையோடு அவரை கேட்டு ஆறுதல் கூறிவருகின்றனர்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி, உலகத்தை ஒரேயடியாக பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்' என்று தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story