சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் கௌதம் மேனன்


சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கும் கௌதம் மேனன்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:33 PM GMT (Updated: 20 Jan 2022 4:33 PM GMT)

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து பிரபல நடிகரை இயக்கயிருக்கிறார் கௌதம் மேனன்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  

இப்படத்தையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Next Story