நடிகர் மணிகண்டன் இயக்கிய முதல் திரைப்படம் வெளியானது


நடிகர் மணிகண்டன் இயக்கிய முதல் திரைப்படம் வெளியானது
x
தினத்தந்தி 30 Jan 2022 5:59 PM GMT (Updated: 30 Jan 2022 5:59 PM GMT)

'ஜெய்பீம்' படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

'காதலும் கடந்து போகும்', 'காலா', 'விக்ரம் வேதா' போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். இவர் சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் மணிகண்டன் 'நரை எழுதும் சுயசரிதம்' என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய 'நரை எழுதும் சுயசரிதம்' திரைப்படம் திரையுலகினரின் பாராட்டுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி தளமான சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஜிகே வாகினி புரொடக்‌சன்ஸ் சார்பில் ஷஷாங்க் வெண்ணலகண்டி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்து ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Next Story