90-ஸ் கிட்சுகளின் விருப்பத் தொடர் 'சக்திமான்' திரைப்படமாகிறது..!


90-ஸ் கிட்சுகளின் விருப்பத் தொடர் சக்திமான் திரைப்படமாகிறது..!
x
தினத்தந்தி 11 Feb 2022 11:37 PM GMT (Updated: 11 Feb 2022 11:47 PM GMT)

90-களில் வெளிவந்து பிரபலமான 'சக்திமான்' தொலைக்காட்சி தொடர் திரைப்படமாக தயாராகிறது.

90-களின் காலக்கட்டத்தில் பல குழந்தைகளை கவர்ந்த முக்கியமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று 'சக்திமான்'. இந்த தொடர் 1997-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுவரை ஒளிபரப்பானது. இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடர் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சக்திமான் தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் சக்திமான் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ள சோனி பிக்சர்ஸ் அசத்தலான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 'மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிரம்பியுள்ளதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது' என டீசரில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

Next Story