தென்னிந்தியளவில் புதிய சாதனை...! மாஸ் காட்டும் அரபிக் குத்து பாடல்...
ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் தென்னிந்தியளவில் புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விஜய்க்கே உரித்தான ஸ்டைலிஷான லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைபடத்தின் ஹலமதி ஹபி என தொடங்கும் ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 12 நாட்களிலேயே, 10 கோடி பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
BEAST MODE!
— Sun Pictures (@sunpictures) February 26, 2022
Sensational #HalamithiHabibo crosses 100 Million views in 12 days 🔥🔥@actorvijay@Nelsondilpkumar@anirudhofficial@Siva_Kartikeyan@hegdepooja@jonitamusic@manojdft@AlwaysJani@Nirmalcuts#Beast#ArabicKuthu#BeastFirstSinglepic.twitter.com/47PzMSQZv4
Related Tags :
Next Story