புரோ கபடி லீக் 'தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பரத் தூதராக கமல்ஹாசன் நியமனம்


புரோ கபடி லீக்  தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக கமல்ஹாசன் நியமனம்
x
தினத்தந்தி 19 July 2017 11:26 AM GMT (Updated: 19 July 2017 11:26 AM GMT)

புரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு சொந்தமான தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்ரூ  கபடி விளையாட்டிற்காக 2014ஆம் ஆண்டில் புரோ கபடி போட்டிகள் உருவாக்கப்பட்டது. இதில் அப்போது எட்டு அணிகள் பங்கேற்றன. 2017ஆம் ஆண்டில் புதிதாக அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், யுபி யோதா என நான்கு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜூலை 28ஆம் தேதியன்று புரோ கபடி லீக் போட்டிகள் தொடங்க உள்ளன.  'தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பரத் தூதராக தற்போது கமல் ஹாசன் நியமிக்கப்பட்ட்டு உள்ளார்.

இது குறித்து தமிழ் தலைவாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

 "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் உருவாக்கிய விளையாட்டை துலக்கமாக தெரிய செய்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமைதான். இந்த அணியின் உரிமையாளர்கள் என்னைத் தேர்வுசெய்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி" என கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.  


Next Story