ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி
x
தினத்தந்தி 17 April 2019 5:52 PM GMT (Updated: 17 April 2019 6:14 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. #IPL2019 #SRHVsCSK


ஐதராபாத்,

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன், டூ பிளஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் தந்தனர். அதில் வாட்சன் 31(29) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து டூ பிளஸ்சிஸ் 45(31) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரெய்னா 13(13) ரன்னிலும், கேதர் ஜாதவ் 1(2) ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். முடிவில் அம்பத்தி ராயுடு 25(21) ரன்களும், ஜடேஜா 10(20) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது, நதீம், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஜதராபாத் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் டேவிட் வார்னர் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில் 50(25) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 (5) ரன்னிலும், விஜய் சங்கர் 7(11) ரன்னிலும் வெளியேறினர். பொறுப்பாக ஆடிய பேர்ஸ்டோ தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். வெற்றி பெற 2 ரன்கள் தேவைபட்ட நிலையில் தீபக் ஹூடா 13(16) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் பேர்ஸ்டோ 61(44) ரன்களும், யூசுப் பதான் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஜதராபாத் அணி 16.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், சாஹர், சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றிபெற்றது.


Next Story