ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்


ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்
x
தினத்தந்தி 3 Oct 2020 9:59 AM GMT (Updated: 3 Oct 2020 9:59 AM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

அபுதாபி, 

அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ளன.

இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் பந்து வீச்சைத் தொடங்க உள்ளனர்.  


Next Story