ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 3 Oct 2021 2:04 PM GMT (Updated: 3 Oct 2021 2:04 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றைய 49-வது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியன்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால்,  ரன்-ரேட் அடிப்படையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய ஆட்டம் முக்கியமானதாக அமையும்.

கொல்கத்தா அணியில் மாற்றமாக ஷகிப் அல் ஹாசன்  சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத் அணியில் மாற்றமாக  உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story