நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : 95 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : 95 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி
x
தினத்தந்தி 17 Feb 2022 8:45 AM GMT (Updated: 17 Feb 2022 8:45 AM GMT)

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியதுநியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.முக்கியமாக நியூசிலாந்து வேக பந்து வீச்சாளர் மேட் ஹென்ரியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க தடுமாறிய அந்த அணி அடுத்தடுத்தது விக்கெட்டுகள் இழந்தது .

இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில்  49.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது 

Next Story