லாகூர் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 232/5


Image Courtesy :@cricketcomau
x
Image Courtesy :@cricketcomau
தினத்தந்தி 21 March 2022 12:53 PM GMT (Updated: 21 March 2022 12:53 PM GMT)

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்துள்ளது.

லாகூர்,

24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ரன்களில் வெளியேறினார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லபுசேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஸ்மித் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கிரீன் 20 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 8 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் அப்ரிடி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Next Story