ஐ.பி.எல் 2022 : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் அதிரடி சதம் ..!


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 2 April 2022 11:43 AM GMT (Updated: 2022-04-02T17:13:21+05:30)

ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மொத்தம் இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர் ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல் களமிறங்கினார் .

ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய மும்பை அணி, பசில் தம்பியின் ஓவரில் ஜோஸ் பட்லர் சிக்ஸர் மழை பொழிந்தார்  3 சிக்ஸர் .2 பவுண்டரி என அந்த ஓவரில் 26 ரன்களை குவித்தார் .இதன் பிறகு படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து அணியின் கேப்டன் சாம்சன் களமிறங்கினார் 

ஒரு புறம் பட்லரும் ,மறுபுறம் சாம்சனும் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.,சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார் 

பின்னர் வந்த ஹெட்மயர் 17-வது ஓவரை வீசிய பொல்லார்டின் ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரி விளாசினார்

சிக்ஸர் ,பவுண்டரி என அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி  சதம் அடித்தார்.சதம் அடித்த அவர்  66 பந்துகளில் 100 ரன்களில் ஆட்டமிழந்தார் 

Next Story