பிறந்தநாளில் சதம் அடித்த டாம் லாதம்..! 24 ஆண்டுகளுக்கு முன் சச்சின் படைத்த சாதனை முறியடிப்பு..!!


பிறந்தநாளில் சதம் அடித்த டாம் லாதம்..! 24 ஆண்டுகளுக்கு முன் சச்சின் படைத்த சாதனை முறியடிப்பு..!!
x
தினத்தந்தி 3 April 2022 9:15 AM GMT (Updated: 3 April 2022 9:15 AM GMT)

ஒருநாள் போட்டியில் பிறந்தநாளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை டாம் லாதம் படைத்துள்ளார்.

ஹாமில்டன்,

நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதமின் பிறந்தநாள் ஆகும். நேற்று அவர் அடித்த 140 ரன்கள் மூலம் ஒரு நாள் போட்டியில் பிறந்தநாள் அன்று அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை டாம் லாதம் படைத்துள்ளார். 

இதன்மூலம் சச்சினின் 24 ஆண்டு கால சாதனையை டாம் லாதம் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு தனது பிறந்தநாளில் 134 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story