வந்துவிட்டார் வார்னர்... டெல்லியின் வெற்றிப் பயணம் தொடருமா?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 April 2022 7:58 AM GMT (Updated: 4 April 2022 7:58 AM GMT)

பாகிஸ்தான் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல்-லில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் களமிறங்குகிறார்.


மும்பை,

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டெல்லி அணியுடன் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வார்னர் மும்பை வந்தடைந்தார். தற்போது அவர் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 7 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பப்டுகிறது.


Next Story