ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ அணி


Image Courtesy : Twitter Lucknow Super Giants
x
Image Courtesy : Twitter Lucknow Super Giants
தினத்தந்தி 4 April 2022 3:59 PM GMT (Updated: 4 April 2022 4:08 PM GMT)

லக்னோ அணி 170 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்று வரும் போட்டியில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் சிக்கினார்.

அனுபவ வீரர் மனிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற ஒரு கட்டத்தில் லக்னோ அணி  68 ரன்களுக்கு  3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடக்க வீராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடி வந்த அணியின் கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் படோனி - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடி காட்ட லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் லக்னோ அணி 170 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

Next Story