ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை : சச்சினை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

லாகூர், 

24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து சமீபத்தில் விளையாடியது.  அப்போது டெஸ்ட் தொடரில் பாபர் அசாம், மொத்தமாக 390 ரன்கள் விளாசினார். இதில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 196 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் பாபர் அசாம் தொடர்ந்து இரண்டு போட்டியில் சதம் விளாசினார். இதில் மூன்றாவது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் அதிவேகமாக 16 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்தார்.

அதுமட்டுமின்றி அவர் ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 16வது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பாபர் அசாம் பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story