ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன..?


ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன..?
x
தினத்தந்தி 10 April 2022 11:22 AM GMT (Updated: 10 April 2022 11:22 AM GMT)

நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

புனே,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.இது மும்பை அணியின் 4-வது தோல்வியாகும் .

தோல்விக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ;

எங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்து எடுத்தோம். நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். ஆனால் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். . ஆனால் தவறான நேரத்தில்  அவுட் ஆனது எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்தியது 

இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியதால் தான் இந்த ரன் வந்தது 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது.இவ்வாறு அவர் கூறினார் .


Next Story