ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 12 April 2022 1:36 PM GMT (Updated: 12 April 2022 1:36 PM GMT)

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது


மும்பை,

இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது 

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில்  அடுத்தடுத்து தோல்வியை கண்டு தத்தளித்து வருகிறது. 

பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பணிந்தது. அதன் பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. அந்த அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  மும்பையை வீழ்த்தியது.

வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Next Story