வெற்றி பாதையை தொடருமா ஐதராபாத் அணி ? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்..!!


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 15 April 2022 10:11 AM GMT (Updated: 15 April 2022 10:11 AM GMT)

சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை,

ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் லக்னோவிடம் 12 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அதை தொடர்ந்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

அந்த அணி சென்னை (6 விக்கெட்), பஞ்சாப் (6 விக்கெட்), மும்பை (5 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் (3 விக்கெட்), டெல்லி (44ரன்) அணிகளிடம் தோற்று இருந்தது. ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 14-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

Next Story