ஐபிஎல் 2022 : தொடரிலிருந்து கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் விலகல்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 15 April 2022 12:57 PM GMT (Updated: 15 April 2022 12:57 PM GMT)

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்


ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொல்கத்தா அணி இதுவரை 5 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது .

 இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் .

இந்த தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடிய சலாம்,  முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார் இதனால் மாற்று  வீரராக ஹர்ஷித் ராணாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

Next Story