வலிமையுடன் மீண்டும் திரும்பி வருவேன் : தீபக் சாஹர்


வலிமையுடன் மீண்டும் திரும்பி வருவேன் : தீபக் சாஹர்
x
தினத்தந்தி 16 April 2022 10:57 AM GMT (Updated: 16 April 2022 11:20 AM GMT)

காயம் காரணமாக தீபக் சாஹர் இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார்


மும்பை,

சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காமல் இருந்தார் . ஒரு சில போட்டிகளுக்கு பிறகு அவர் சென்னை அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது .

இந்நிலையில்  தீபக் சாஹர்  இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து  விலகியுள்ளார் .இது சென்னை அணி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ பி எல் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு தீபக் சாஹர் எடுக்கப்பட்டார். சென்னை அணியில் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட வீரரும் இவர்தான் .

இந்நிலையில் இது குறித்து தீபக் சாஹர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில்  பங்கேற்கவில்லை . மீண்டும் சிறப்பாகவும், வலிமையாகவும் திரும்பி வருவேன்.தொடர்ந்து ஆதரவு அளித்த  ரசிகர்களுக்கு நன்றி என்று அந்த பதிவில்  அவர் தெரிவித்துள்ளார் 

Next Story