ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுக்கள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை....!


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 17 April 2022 2:52 PM GMT (Updated: 17 April 2022 2:52 PM GMT)

ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற ஆட்டத்தில்  ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ,ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .

இதனால் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார்..

Next Story