ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடி அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 17 April 2022 5:11 PM GMT (Updated: 17 April 2022 5:11 PM GMT)

டேவிட் மில்லர் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  குஜராத் - சென்னை  அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்படுகிறார் .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில்  டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது.அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்  ,ராபின் உத்தப்பா களமிறங்கினர் .

கடந்த போட்டியில் ஹீரோவாக ஜொலித்த உத்தப்பா இந்த போட்டியில் 3  ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த மொயீன் அலி 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் 

மறுபுறம் ருதுராஜ் அதிரடியாக  விளையாடினார் ,அவருடன் சேர்ந்து அம்பத்தி ராயுடு நிதானமாக விளையாடினார் .சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார் . 

மறுபுறம் நிதானமாக ஆடி கொண்டிருந்த ராயுடு பந்துகளை பவுண்டரி,சிக்சருக்கு விரட்டினார்,அவர் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிவம் துபே ,ஜடேஜா கடைசி நேரத்தில்அதிரடி காட்டினர் கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் .

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது .

170  ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது .தொடக்க வீரர்களாக சுப்மன் கில்,விருத்திமான் சஹா  களமிறங்கினர் .

தொடக்கத்தில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் வந்த விஜய் ஷங்கரும்  எதுவும்  எடுக்காமல் வெளியேறினார் 

இதனை தொடர்ந்து அபினவ் மனோகர் 12 ரன்களிலும் ,விருத்திமான் சஹா 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .இதனால் 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து குஜராத் அணி தத்தளித்தது .

அடுத்து வந்த டேவிட் மில்லர் ,அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர்கள் .1 பவுண்டரி பறக்கவிட்ட மில்லர் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

Next Story