"அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்"- இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது சுனில் கவாஸ்கர் கணிப்பு


அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்- இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது சுனில் கவாஸ்கர் கணிப்பு
x
தினத்தந்தி 19 April 2022 7:23 AM GMT (Updated: 19 April 2022 7:23 AM GMT)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,இளம் வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும், தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதால் , அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளார் .

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக் .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், உம்ரான் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் நேரலையில் அவர் கூறுகையில் ;

உம்ரான் மாலிக் தனது வேகத்தால் மிகவும் ஈர்க்கப்ட்டுள்ளார் , ஆனால் பந்துவீச்சில்  அவரது வேகத்தை விட,  அவரது துல்லியம் (அது ஈர்க்கப்பட்டது). மேலும் உம்ரன் மாலிக் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .

Next Story