ஐபிஎல் : சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு - வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரிலிருந்து விலகல்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL

ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன . 

இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் .ஐபிஎல் ஏலத்தில் ரூ 1.90 கோடிக்கு சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்தது .

இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான  உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீசா பதிராணா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .

Next Story