கொரோனா பாதிப்பால் அணியில் குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்- ரிஷாப் பண்ட்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 21 April 2022 10:32 AM GMT (Updated: 21 April 2022 10:32 AM GMT)

நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற    போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது 

போட்டி நிறைவுக்கு பின்  டெல்லி அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு  கேப்டன்   ரிஷாப் பண்ட் கூறுகையில் ;

 (போட்டிக்கு முன்) அணியில் சிலர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால்  "சில குழப்பம், பதட்டம் மற்றும் இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்று ஒருவித உணர்வு இருந்தது, 
 
ஆனால் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம்.இவ்வாறு தெரிவித்தார் .


Next Story