டு பிளிஸ்சிஸ், கோலி, மேக்ஸ்வெல் அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் - பெங்களூரு தடுமாற்றம்


டு பிளிஸ்சிஸ், கோலி, மேக்ஸ்வெல் அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் - பெங்களூரு தடுமாற்றம்
x
தினத்தந்தி 23 April 2022 2:40 PM GMT (Updated: 23 April 2022 2:40 PM GMT)

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினதால் அந்த அணி தடுமாறி வருகிறது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர்.

7 பந்துகளை சந்தித்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த விராட் கோலி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முறையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான அனுஜ் ராவத் தான் சந்தித்த 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

இதனால், 2 ஓவரில் பெங்களூரு அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்துவந்த மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜன் பந்து வீச்சில் அவரும் கேட்ச் முறையில் அவுட் ஆனார். இதனால், ஒருகட்டத்தில் பெங்களூரு அணி 4.2 ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து வந்த பிரபுதேசாய் 10 பந்துகளில் 6 ரன்னுடனும், ஷபாஷ் அகமது 4 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி பெங்களூரு 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story