ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் : ஷிகர் தவான் சாதனை


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 26 April 2022 10:02 AM GMT (Updated: 26 April 2022 10:02 AM GMT)

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்

மும்பை,

 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று  நடைபெற்ற  38-வது லீக் ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது

இந்த ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.இது ஷிகர் தவானின் 200 வது ஐபிஎல் போட்டியாகும் . இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் ஷிகர் தவான்  88 ரன்கள் குவித்தார் .

இதனால் ஐபிஎல் போட்டியில்  ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் , விராட் கோலிக்கு பிறகு 6 ஆயிரம் ரன்களை கடந்த 2 வது வீரர் தவான் ஆவார் .

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


Next Story