ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்..!


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 1 May 2022 3:36 PM GMT (Updated: 1 May 2022 3:36 PM GMT)

இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன

 மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இன்று நடைபெறும்   46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதுகின்றன.போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சன்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் ,களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இருவரும் 100 ரன்கள் சேர்த்தனர் 

இருவரும் சிறப்பாக விளையாடி .பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர் .ருதுராஜ் கெய்க்வாட்  அரைசதம் அடித்தார்.தொடர்ந்து கான்வே 39 பந்துகளில் அரைசதம் அடித்தார் . 

அரைசதம் கடந்த பிறகு இருவரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் . மார்கோ  ஜான்சென்  வீசிய ஒரு ஓவரில் 2 சிக்ஸர் .1 பவுண்டரி பறக்கவிட்டார் கான்வே .

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில்  99 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து  வெளியேறினார் .

Next Story