ஐபிஎல் : இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் -டேவிட் வார்னர்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 4 May 2022 12:37 PM GMT (Updated: 4 May 2022 12:37 PM GMT)

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது

மும்பை,

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி  அணி 4 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.  

இந்நிலையில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறுகையில் ;

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து முன்னேறி, இறுதிப் போட்டிக்கு வருவதற்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும்.ஒரு வலுவான போட்டி உள்ளது, நாங்கள் இரண்டு அணிகளுக்கு எதிராக வர வேண்டும் , பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுக்கு  எதிராக நாங்கள் வர வேண்டும்.

நான் அல்லது அவர் (பிரித்வி ஷா) அல்லது  (மிட்செல் மார்ஷ்)  80 , 90 ரன்கள் அல்லது சதம் அடிப்பது மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன், நல்ல ரன்கள் இலக்காக நிர்ணயிப்பது  அல்லது பெரிய ரன்கள் இலக்கை சேஸ் செய்வதற்கு , அதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார் 

Next Story