ஐபிஎல் : சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு- சென்னை அணிகள் மோதுகின்றன .

மும்பை.

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு-  சென்னை -  அணிகள் மோதுகின்றன .

இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ் ,விராட் கோலி களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர் .அதன்பிறகு பிளஸ்சிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில்  (ரன் அவுட் ) தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .அடுத்த ஓவரிலே விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்து வந்த மகிபல் லோம்ரோர் ,ரஜத் படிதார் இருவரும் நிலைத்து  ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 123 ரன்னாக இருந்தபோது ரஜத் படிதார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய  மகிபால் லோம்ரோர் 42  ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார் இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173  ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது   .

Next Story