கேப்டனாக ரிஷாப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார் : சுரேஷ் ரெய்னா


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 1:53 PM GMT (Updated: 5 May 2022 1:53 PM GMT)

ரிஷாப் பண்ட் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மும்பை,

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரிஷாப் பண்ட் தலைமையிலான  டெல்லி அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி  ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது .

இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .

இந்நிலையில் ரிஷாப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையில் ஈடுபட்டு வரும் சுரேஷ் ரெய்னா கூறுகையில் ;

ரிஷாப் பண்ட்  ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவர் குல்தீப் யாதவை நன்றாக பந்துவீச்சில் பயன்படுத்தி வருகிறார் . ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக  பண்ட் இன்னும்  அதிரடியாக .விளையாடவில்லை . அவருக்குப் பின்னால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார் . அவரிடம் (பண்ட் )  இருந்து  விரைவில் பெரிய இன்னிங்ஸ் வர உள்ளது .இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story