ஐபிஎல் : வார்னர் ,ரோவ்மன் பவல் அதிரடி : டெல்லி அணி 207 ரன்கள் குவிப்பு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 3:58 PM GMT (Updated: 5 May 2022 4:04 PM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன

மும்பை, 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி டெல்லி அணி  முதலில் பேட்டிங் செய்தது 

தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர் ,மந்தீப் சிங் களமிறங்கினர் ,முதல் ஓவரில் மந்தீப் சிங் ரன்  எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்த வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் ,வார்னருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.விக்கெட்டுக்கள் இழந்தாலும் வார்னர் அதிரடியாக ரன்கள் குவித்தார் .

மறுபுறம் ரிஷாப் பண்ட் ஹைதராபாத் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர் ,1 பவுண்டரி பறக்க விட்டார் .அதனை தொடர்ந்து அவர் அந்த ஓவரில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 33பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ரோவ்மன் பவல் அதிரடியாக விளையாடினார் .வார்னர் , பவல் இணைந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்,

உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில்  ரோவ்மன் பவல் 18 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார் .

சிறப்பாக விளையாடிய வார்னர் 92 ரன்களிலும் ,பவல் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 208  ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடுகிறது . 

Next Story