ஐபிஎல் : ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 6:15 PM GMT (Updated: 5 May 2022 6:15 PM GMT)

டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை, 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் 
மோதின. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி டெல்லி அணி  முதலில் பேட்டிங் செய்தது 

தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர் ,மந்தீப் சிங் களமிறங்கினர் ,முதல் ஓவரில் மந்தீப் சிங் ரன்  எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்த வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் ,வார்னருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.விக்கெட்டுக்கள் இழந்தாலும் வார்னர் அதிரடியாக ரன்கள் குவித்தார் .

மறுபுறம் ரிஷாப் பண்ட் ஹைதராபாத் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர் ,1 பவுண்டரி பறக்க விட்டார் .அதனை தொடர்ந்து அவர் அந்த ஓவரில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 33பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ரோவ்மன் பவல் அதிரடியாக விளையாடினார் .வார்னர் , பவல் இணைந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்,

உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில்  ரோவ்மன் பவல் 18 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார் .
.
சிறப்பாக விளையாடிய வார்னர் 92 ரன்களிலும் ,பவல் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 208  ரன்கள் என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி  விளையாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 7 ரன்களிலும் ,கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து  ஏமாற்றம் அளித்தனர் .

பின்னர் வந்த ராகுல் திரிபாதி 22 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் ,ஐடன் மார்க்ரம் நிலத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .அதன் பிறகு பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர் .சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார் .விக்கெட்டுக்களை இழந்தாலும் அதிரடி ஆட்டத்தை விடாத நிக்கோலஸ் பூரன் பந்துகளில் அரைசதம் அடித்தார் . கடைசி 3 ஓவரில் 55 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக விளையாடிய பூரன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 எடுத்தது .இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது .இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது 

Next Story