தூத்துக்குடியில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி மகன் திருமண வரவேற்பு விழா ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


தூத்துக்குடியில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி மகன் திருமண வரவேற்பு விழா  ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2017 9:30 PM GMT (Updated: 3 May 2017 12:04 PM GMT)

தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மகன் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். வரவேற்பு விழா தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியின் மகன் அந்தோனி மாமல்லன் நட்டர்ஜி–ஏ.ட

தூத்துக்குடி,

தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மகன் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

வரவேற்பு விழா

தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியின் மகன் அந்தோனி மாமல்லன் நட்டர்ஜி–ஏ.டி.அனிஷ் ஆகியோரது திருமணம் வடக்கன் குளத்தில் நடந்தது. தொடர்ந்து திருமண வரவேற்பு விழா நேற்று தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

வாழ்த்து

விழாவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், க.பாண்டியராஜன், மனோகரன், ராஜமாணிக்கம், எம்.பி.க்கள் அசோக்குமார், கோபாலகிருஷ்ணன், பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், மார்க்கண்டேயன், நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜ்நாராயணன், வக்கீல் பிரிவு தலைவர் செல்வக்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சாத்தான்குளம் ஒன்றிய யெலாளர் சவுந்தரபாண்டி, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வீரபாகு, தூத்துக்குடி பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்தராஜா, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜூ, தொழில் அதிபர்கள் ஏ.வி.எம்.மணி, ஆத்தூர் மணி, பரமசிவம், பி.எஸ்.என்.எல் நிறுவன துணை பொதுமேலாளர் லட்சுமணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை மணமகனின் பெற்றோர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி,–எமிமா அமலாராணி, சகோதரர் ஜோசப் சாமுவேல் நட்டர்ஜி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.


Next Story