சுல்தான்பத்தேரியில் ஆலங்கட்டி மழை


சுல்தான்பத்தேரியில் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 7:11 PM GMT)

சுல்தான்பத்தேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதை கண்ட சிறுவர்கள் ஆலங்கட்டியை கையில் அள்ளி வீசி விளையாடினர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை முதல் பிற்பகல் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதன்பின்னர் மேகமூட்டங்கள் ஏற்பட்டு சாரல் மழை பெய்கிறது. இருவேறு காலநிலைகள் காணப்படுவதால் வெப்பம் சற்று தணிந்து இதமான காலநிலை காணப்படுகிறது.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களின் எல்லையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. தற்போது மாலை வேளைகளில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்கட்டி மழை

ஆனால் சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆலங்கட்டி மழை தொடர்ந்து பெய்ததால் மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதம் அடைந்தது. ஆனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் ஆலங்கட்டியை எடுத்து வீசி எறிந்து விளையாடினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி இருந்த வேளையில் தற்போது மாலை நேரத்தில் சாரல் மழை பெய்வதால் குளுகுளு காலநிலை காணப்படுகிறது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றனர்.


Related Tags :
Next Story