குரோம்பேட்டையில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


குரோம்பேட்டையில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 8:45 PM GMT)

சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

தாம்பரம்,

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் உள்பட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் இருந்து தாம்பரம் வரை நெடுஞ்சாலையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story