மீன்பிடி விசைப்படகுக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் தகவல்


மீன்பிடி விசைப்படகுக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 May 2017 10:15 PM GMT (Updated: 3 May 2017 9:08 PM GMT)

மீன்பிடி விசைப்படகுக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில்,


மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்த, தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்டி, படகு ஒன்றிற்கு 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த முழுநேர மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் மீன்வளத்துறையின் www.fis-h-e-r-ies.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை மண்டல மீன்துறை துணை அல்லது இணை இயக்குனர் மற்றும் கடலோர மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறை ஆணையர், நிர்வாக அலுவலகக் கட்டிடங்கள், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006 என்ற முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன், சூரை மீன்பிடி படகு கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அசல் வரைபடத்தை தகுதி வாய்ந்த கப்பல் அல்லது மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு அனுப்பப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் அல்லது அலுவலக தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story