கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 9:15 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறில் 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வாய்மேடு,

தலைஞாயிறு ஒன்றியம் வண்டல், அவரிக்காடு, குண்டூரான்வெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவரிக்காடு - வண்டல் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைஞாயிறு கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செல்லதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 3 கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story