பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்


பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 9:51 PM GMT (Updated: 3 May 2017 9:51 PM GMT)

குடிநீர் வழங்க கோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்,

பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி கிராம ஊராட்சியில் அண்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சில தெருக்களில் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பகுதியில் உள்ள போயர் தெருவில் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த தெருவிற்கு, முன்பு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

இந்த கிராம மக்கள் நேற்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அதியமான், ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், தேவையான அளவில் குடிநீர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story