திருடிய அம்மன் சிலையை அதே இடத்தில் வைத்து சென்ற மர்மநபர்கள்


திருடிய அம்மன் சிலையை அதே இடத்தில் வைத்து சென்ற மர்மநபர்கள்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:30 PM GMT (Updated: 21 Jun 2017 1:21 PM GMT)

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் பீடத்தை உடைத்து கெங்கையமமன் சிலையை திருடிச் சென்றனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் பீடத்தை உடைத்து கெங்கையமமன் சிலையை திருடிச் சென்றனர். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவு யாரும் இல்லாத நேரத்தில் சிலையை அதே இடத்தில் வைத்து, பூக்களை வைத்து பூஜை செய்து சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். உள்ளூரை சேர்ந்த நபர்கள்தான் சிலையை திருடியிருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு பயந்து சிலையை மீண்டும் வைத்திருக்க வேண்டும் என்பதும் தெரிய வந்தது.


Next Story