சிங்காரபேட்டை அருகே ஊராட்சி பணியாளரின் காது அறுப்பு; 2 பேர் கைது


சிங்காரபேட்டை அருகே ஊராட்சி பணியாளரின் காது அறுப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 21 Jun 2017 4:57 PM GMT)

சிங்காரபேட்டை அருகே ஊராட்சி பணியாளரின் காது அறுப்பு; பெண் உள்பட 2 பேர் கைது 6 பேருக்கு வலைவீச்சு

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகே உள்ள நடுப்பட்டு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 55). இவர் நடுப்பட்டு ஊராட்சியில் பணியாளராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52), விவசாயி. இந்த நிலையில் நேற்று பொது குழாயில் இருந்து தனது விவசாய நிலத்திற்கு முருகேசன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த வெள்ளையன் இது தொடர்பாக முருகேசனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளையன் மற்றும் அவருடைய உறவினர்கள் மகேஸ்வரி, செல்வம், குமரவேல் உள்பட 8 பேர் சேர்ந்து வெள்ளையனை தாக்கி, கத்தியால் காதை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வெள்ளையன் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காரபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story