தென்காசியில் துணிகரம் நகைக்கடையில் ரூ.1¼ லட்சம் நகை திருட்டு வாடிக்கையாளர் போல் வந்து 2 பெண்கள் கைவரிசை


தென்காசியில் துணிகரம் நகைக்கடையில் ரூ.1¼ லட்சம் நகை திருட்டு வாடிக்கையாளர் போல் வந்து 2 பெண்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 Jun 2017 9:00 PM GMT (Updated: 21 Jun 2017 7:02 PM GMT)

தென்காசியில் நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து 2 பெண்கள் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை திருடி சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நகைகள் திருட்டு கடையநல்லூர் அழகு மகுதனன் கீழமேல் தெருவை சேர்ந்த முகம்மது யூசுப் மகன் உதுமான்

தென்காசி

தென்காசியில் நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து 2 பெண்கள் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை திருடி சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைகள் திருட்டு

கடையநல்லூர் அழகு மகுதனன் கீழமேல் தெருவை சேர்ந்த முகம்மது யூசுப் மகன் உதுமான் (வயது 35). இவர் தென்காசி அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 பெண்கள் நகைகள் வாங்குவது போல் வந்தனர். அவர்களிடம் கடை ஊழியர் கனி வளையல்களை காட்டினார்.

அப்போது கனி திரும்பும் நேரத்தில் நைசாக அவருக்கு தெரியாமல் 2 வளையல்களை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதேபோல் மேலும் 2 வளையல்களை எடுத்து கொடுத்தார். அந்த 4 வளையல்களையும் அந்த பெண் மறைத்து வைத்துக் கொண்டார்.

கண்காணிப்பு கேமராவில்...

பின்னர் அந்த 2 பெண்களும் கனியிடம் மற்றொரு நாள் வருவதாக கூறிவிட்டு கடையின் விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். அதன்பிறகு நகைகளை கடை ஊழியர்கள் சரிபார்த்தபோது 4 வளையல்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அந்த பெண்கள் வாடிக்கையாளர் போல் வந்து நகைகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

திருட்டு போன நகைகள் மொத்தம் 45 கிராம் எடை கொண்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் ஆகும். இதுகுறித்து உதுமான் தென்காசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற 2 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார். அந்த பெண்கள் மதுரை அல்லது விருதுநகரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story