கோவில் பூசாரிகள் தாம்பூல தட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்


கோவில் பூசாரிகள் தாம்பூல தட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 9:40 PM GMT)

கோவில் பூசாரிகள் தாம்பூல தட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் வாசு உள்பட சிலர் தேங்காய் பழத்துடன் கூடிய தாம்பூல தட்டில் கோரிக்கை மனுவை வைத்து கலெக்டரிடம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் துறையூர் தாலுகா பி மேட்டூரில் உள்ள மாசி பெரியசாமி கோவிலில் அறநிலைய துறை முத்திரை இல்லாத உண்டியல் வைத்து காணிக்கை வசூல் செய்யப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி அறநிலைய துறை மூலம் அரசு முத்திரையுடன் கூடிய உண்டியல் வைக்கவேண்டும், இதே போல் முசிறி தாலுகா வாழசிராமணி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலையும் அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அவர்கள் கொடுத்த இன்னொரு மனுவில், முசிறி தாலுகா தலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பக்தர்களால் தானமாக வழங்கப்படும் பசுக்கள் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்தி தானமாக பெறப்படும் மாடுகளை கோவில் பூசாரிகளுக்கு விலை இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. 

Next Story