பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு சரமாரி தாக்குதல்


பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:25 PM GMT (Updated: 21 Aug 2017 11:25 PM GMT)

ஜோலார்பேட்டையை அடுத்த சாமலேரிமுத்தூர் பெருமாள்வட்ட பகுதியில் நேற்று மாலை மாந்திரீக தகடுகள் மற்றும் பில்லி, சூனியம் வைக்கும் பொருட்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஒருபெண் சுற்றித்திரிந்தார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த சாமலேரிமுத்தூர் பெருமாள்வட்ட பகுதியில் நேற்று மாலை மாந்திரீக தகடுகள் மற்றும் பில்லி, சூனியம் வைக்கும் பொருட்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஒருபெண் சுற்றித்திரிந்தார். அப்பகுதி மக்கள், அந்தப் பெண்ணை பிடித்து இரு கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு, நீ குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா? எனக் கேட்டு, சரமாரி தாக்கினர். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த சுபாஷினி (வயது 35) என்று தெரிவித்தார். அவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளார். இவரிடம் இருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story