துப்புரவு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் பா.ம.க. வலியுறுத்தல்


துப்புரவு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் பா.ம.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 22 Aug 2017 6:38 PM GMT)

துப்புரவு பணியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

சிவகாசி,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சிவகாசி திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதும் அரசு, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடிக்க தண்ணீர் இன்றி அலைகிற அதே நேரத்தில் தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு பலர் பலியாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சுகாதாரத்தில் இந்த அரசு போதியகவனம் செலுத்தவில்லை. குறிப்பாக நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் குப்பைகள்அள்ளப்படுவதில்லை. மலைபோல் தேங்கி இருக்கும் குப்பைகளால் டெங்கு நோய் மற்றும் பல்வேறு காய்ச்சல் வேகமாகபரவி வருகிறது.

இதைதடுக்க வாரத்திற்கு ஒரு முறையாவது குப்பைகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story