பெண் பயணிகளின் முன் ரெயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் கைது


பெண் பயணிகளின் முன் ரெயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2017 11:15 PM GMT (Updated: 22 Aug 2017 9:59 PM GMT)

பெண் பயணிகளின் முன் ரெயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

பெங்களூருவை சேர்ந்த பெண் எழுத்தாளர் கடந்த ஜூலை 10–ந் தேதி போரிவிலியில் இருந்து தாதருக்கு மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து பெட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் இருந்த பயணிகளை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்டார். இதுகுறித்து பெண் பயணிகள் கேட்ட போது வாலிபர் அவர்களை அவதூறாக பேசினார். பின்னர் அவர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டார். பெண் எழுத்தாளர் சமூக வலைதளத்தில் வாலிபரின் புகைப்படத்துடன் நடந்த சம்பவத்தை விவரித்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் வாலிபரின் படத்தை வைத்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரெயிலில் பெண் பயணிகளின் முன் ஆபாசமான செயலில் ஈடுபட்டவர் ராஜூ பப்பு (வயது 19) ஆவார். இவர் ஒரே இடத்தில் தங்காமல் குஜராத்திற்கும், மும்பைக்கு சென்று வந்ததால் கைது செய்ய தாமதமானதாக ரெயில் போலீஸ்காரர் ஒருவர் கூறினார்.


Next Story