தூத்துக்குடியில் புத்தக திருவிழா வருகிற 2–ந் தேதி தொடங்குகிறது


தூத்துக்குடியில் புத்தக திருவிழா வருகிற 2–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 Sep 2017 8:30 PM GMT (Updated: 20 Sep 2017 2:13 PM GMT)

தூத்துக்குடியில் வருகிற 2–ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வருகிற 2–ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகிறது.

இது குறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

புத்தக திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், விலை மதிப்பில்லாத புத்தகங்கள் ஒரே இடத்தில் எளிதில் கிடைக்கும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக திருவிழா மற்றும் விற்பனை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடக்கிறது.

இந்த புத்தக திருவிழா வருகிற 2–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. அங்கு சுமார் 100 புத்தக விற்பனை நிலையங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

கலை நிகழ்ச்சிகள்

பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திருவிழாவுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் தினந்தோறும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே புத்தக திருவிழாவில் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story