எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 20 Sep 2017 9:17 PM GMT)

ஓசூர் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை தமிழக இளைஞர்் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் அதி நவீன எல்.இ.டி. வாகனம் மூலம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் அரசின் சாதனை குறும்படங்கள் திரையிடும் பணிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா முன்னிலை வகித்தார்.

மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்

இந்த புகைப்பட கண்காட்சியையும், எல்.இ.டி. வாகனத்தில் திரையிடப்பட்ட எம்.ஜி.ஆரின் படங்கள், பாடல்கள் மற்றும் அரசின் சாதனை குறும்படங்களை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேம்நாத், ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், தாசில்தார் பூசன்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ். நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் சரஸ்வதி நடராஜன், லோகநாதன், நாராயணரெட்டி, அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story