குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்


குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 20 Sep 2017 9:20 PM GMT)

குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் முகாமினை பயன்படுத்தி நலம் பெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனா குமாரி, தா.பழூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை அரசு தலைமை கொறடா நட்டு வைத்தார். முகாமிற்கான உதவிகளை சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பலர் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story